ராமநாதபுரம்: அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி மரணம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே, வயலுக்குச் சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

முதுகுளத்தூரை அடுத்துள்ள மேலச்சிறுபோது கிராமத்தில் முத்தையா என்ற விவசாயி, தனது வயலில் வேலை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததை கவனிக்காமல் அதன்மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேலச்சிறுபோது சிற்றூர் மக்கள் மற்றும் விவசாயி முத்தையாவின் உறவினர்கள் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற காவல் மற்றும் வருவாய்த்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை: திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

வயல்வெளியில் தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்த கம்பியை சீரமைக்கும்படி பலமுறை மின் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மேலச்சிறுபோது கிராமத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



Post a Comment

Previous Post Next Post