அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதனைத் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு ஜாவத் (jawad) என பெயரிடப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு மேலும் தீவிரமடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா ஒடிஷா அருகே அருகே 4-ஆம் தேதி காலை வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Tags:
News