பெண் ஐபிஎஸ் அதிகாரி தொடுத்த பாலியல் வழக்கு - முன்னாள் டிஜிபியின் 4 மனுக்கள் தள்ளுபடி-Sexual assault case against a female IPS officer - 4 petitions dismissed by former DGP

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாகக் கூறி, முன்னாள் டிஜிபி தாக்கல் செய்திருந்த 4 மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இன்று இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் ஆஜராகவில்லை.

மேலும் வழக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ளதால், அதுவரை வழக்கு விசாரணை தொடரக்கூடாது என்ற மனு, முதல் 3 சாட்சிகளை நாங்கள் குறுக்கு விசாரணை செய்த பின்னரே மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்ற மனு போன்ற முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பில் தாக்கல் செய்திருந்த 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அன்றைய தினம் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவும் உத்தரவிட்டார். 

கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருபெண் குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post