குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் எப்போது? - அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி-When are the Group-2 and Group-4 exams? - Notice issued by DNPSC

2022-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவர் பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் அட்டவணையை வெளியிட்டுள்ளார். அந்த அட்டவணையின்படி, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குரூப் 2 தேர்வுகளுக்கும், மார்ச் மாதம் குரூப் 4 தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
image
2022-ஆம் ஆண்டில் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. வரும் ஆண்டில், டிஎன்பிஎஸ்சி சார்பில் 32 வகையான தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அறிவிப்பு வெளியான 75 நாள்களில் தேர்வுகள் நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறுகையில், ''தேர்வு மையங்களிலிருந்து விடைத் தாள்களைக் கொண்டு வரும் வாகனங்கள் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும். ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தைக் கொண்டே, விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்குக் கொண்டு வரும் வழியில், விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்யப்பட்டது. எனவே, இனி, ஓஎம்ஆர் விடைத்தாளில் உள்ள தேர்வரின் தனிப்பட்ட விவரத்தை, தேர்வு முடிந்தபின் தனியாக பிரித்தெடுக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகளைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.


 

Wondershare Software

Post a Comment

Previous Post Next Post