லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் எஸ்.பி நல்லம நாயுடு காலமானார்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடு வயது மூப்பின் காரணமாக காலமானார். அவருக்கு வயது 83.

சென்னை பெரவள்ளூரில் வசித்துவந்த அவர், 1961ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். இரண்டு முறை குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றுள்ளார். மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையில் திறம்பட செயல்பட்டதற்காக ஆளுநரிடமும் விருது வாங்கியுள்ளார்.

1997 முதல் 2015ஆம் ஆண்டு வரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மை விசாரணை அதிகாரியாக நல்லம நாயுடு பணியாற்றியுள்ளார். மேலும் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணை அதிகாரியாகவும் செயலாற்றியவர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post