மாமாவிடம் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தல் நாடகம் - சிக்கிய இளைஞர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 10 லட்சம் ரூபாய் கேட்டு சொந்த மாமாவிடம் கடத்தல் நாடகம் ஆடிய இளைஞர் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

ஹமீது என்ற இளைஞர் தனது மாமாவான ஹசேனின் வெங்காயம் மொத்த விற்பனை நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஹசேனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ஹமீதை கடத்தியதாகவும் 10 லட்சம் ரூபாய் தராவிட்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

பின்னர் மிரட்டல் விடுத்த நபர் கூறிய இடத்துக்குச் சென்று பணத்தை வழங்கியப்போது மறைந்திருந்த காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை கைது செய்தனர். விசாரணையில் ஹமீதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்திற்காக கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியது அம்பலமானது. இதனையடுத்து ஹமீது உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post