
கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழை பெய்யும் அளவை பொருத்து பாதிப்பை பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர்.
நாளை கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (29.11.2021) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப்படிக்க...ஜெயலலிதா வசித்த இல்லத்தின் சாவியை ஒப்படைக்கக்கோரி தீபா, தீபக் மனு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News