மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் பாலாற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே கடலூர் கிராமம் சத்திரம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (35). கம்பிகட்டும் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தொடர் மழை காரணமாக வேலையில்லாததால் வீட்டில் இருந்த இவர், பாலாற்றில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது ஆற்றில் தவறி விழுந்த மோகனை, அக்கம்பக்கத்தில் மீட்க முயன்றும் முடியாததால் கூவத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் தேடிப்பார்த்து விட்டு இன்று திருக்கழுகுன்றம் தீயணைப்புத் துறையினரின் உதவியிடன் படகில் சென்று தேடினர். அப்போது கடலூர் சத்திரம்பேட்டை இடுகாடு அருகே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News