கொளத்தூர் பகுதியில் பிரச்னை இல்லையா? தண்ணீர் தேங்கி நிற்க வில்லையா? என குஷ்பு சுந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள டுமீல் குப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி 500 பேருக்கு ப்ரெட் மற்றும் பால் பாக்கெட்டுகளை, நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளரிடம் பேசிய குஷ்பு அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ’’ தமிழக முதல்வரை தவிர அரசில் வேறுயாரும் இந்த கனமழை பேரிடர் காலத்தில் ஒழுங்காக வேலை செய்யவில்லை; கொளத்தூர் பகுதியில் பிரச்னை இல்லையா? தண்ணீர் தேங்கி நிற்க வில்லையா? அதிமுக காலத்தில் ஏற்பட்ட சூழல், திமுக ஆட்சியில் ஏற்படவில்லையா? திமுகதான் ஊழல் கட்சி’’ என்றார். நடிகர் சூர்யா தொடர்பான சர்ச்சை குறித்து கேட்டபோது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும், பார்த்துவிட்டு தெரிவிக்கிறேன் எனவும் கூறினார்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருக்கும்போதே அங்கு உதவிபெற வந்த பெண்மணி ஒருவர், ’’5 கிலோ அரிசி கொடுத்திருந்தால் கூட பிரயோஜனமாக இருந்திருக்கும் ,தற்போது நீங்கள் கொடுத்திருக்கும் ப்ரெட் மற்றும் பால் ஒருவேளைக்குக்கூட பத்தாது’’ என வேதனையோடு தெரிவித்தார். அதற்கு குஷ்பு, உறுதியாக செய்கிறோம் என்று அவரிடம் கூறினார்.
மழை சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News