Heavy rain warning for 10 districts in Tamil Nadu

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழைக்கான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், தஞ்சை, திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலவே நாளையும் நாளை மறுநாளும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை இருக்குமென்பதால் தென்கிழக்கு வங்கக் கடல் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல், அந்தமான் கடற்பகுதியில் மத்திய கிழக்கு தென்கிழக்கு அரபிக்கடல், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் சார்பில் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ள தகவலில் கூறப்பட்டிருப்பவை:

“தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக,

image

16.11.2021 (இன்று) - கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.11.2021: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18.11.2021: திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன கன மழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

19.11.2021: அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

20.11.2021 திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

image

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி: சென்னையில் 17, 18ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மதுக்கூர் (தஞ்சாவூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்) தலா 10, திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), லக்கூர் (கடலூர்) தலா 7, கிராண்ட் அணை (தஞ்சாவூர்), மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 6, சிவகங்கை, கல்லிக்குடி (மதுரை), கிருஷ்ணகிரி, தென்பரநாடு (திருச்சி), புதுக்கோட்டை, வீரகனூர் (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை), சிற்றார் (கன்னியாகுமரி), லால்குடி திருச்சி , திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மணம்பூண்டி (விழுப்புரம்), சிவலோகம் (கன்னியாகுமரி) தலா 5, மருங்காபுரி (திருச்சி), ஆலங்குடி (புதுக்கோட்டை), விராலிமலை (புதுக்கோட்டை), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), மலையூர் (புதுக்கோட்டை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), திருவையாறு (தஞ்சாவூர்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) திருச்சிராப்பள்ளி, வெட்டிக்காடு (தஞ்சாவூர்) தலா 4, வேப்பூர் (கடலூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), திண்டுக்கல் (திண்டுக்கல்), காரைக்குடி (சிவகங்கை), திருமானூர் (அரியலூர்), துறையூர் (திருச்சி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), சேலம், சுருளக்கோடு (கன்னியாகுமரி), ஓமலூர் (சேலம்), சமயபுரம் (திருச்சி), தொழுதூர் (கடலூர்), பாலவிடுதி (கரூர்), பழனி (திண்டுக்கல்), அரிமளம் (புதுக்கோட்டை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தலா 3.

image

வங்க கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16.11.2021: தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.11.2021, 18.11.2021: மத்திய மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

அரபிக்கடல் பகுதிக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை:

16.11.2021: மத்திய கிழக்கு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு, imdchennai.gov.in இணையதளத்தை காணவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



The Chennai Meteorological Department has forecast heavy rains in 10 districts in Tamil Nadu. 10 districts including Kallakurichi, Salem, Namakkal, Erode, Dharmapuri, Ariyalur, Tanjore and Trichy are likely to receive heavy showers.

Chennai, Tiruvallur and Kanchipuram districts will receive heavy rains tomorrow and the day after tomorrow. Fishermen have been advised not to venture into the Central Bay of Bengal, the Andaman Sea, the Middle East, the Arabian Sea and the coastal areas of Karnataka due to heavy rains.

Director Puviarasan on behalf of the Meteorological Center said:

“The low pressure area prevailing in the south-eastern and central eastern Bay of Bengal and the adjoining Andaman Sea is likely to move towards the southern Andhra-North Tamil Nadu coast on the 18th, moving westwards in the next two days. Due to this,


16.11.2021 (Today) - Heavy showers with thundershowers at Kallakurichi, Salem, Namakkal, Erode, Dharmapuri, Ariyalur, Perambalur, Cuddalore, Thanjavur and Tiruchirappalli districts. , Light to moderate rain in many places in other districts.

17.11.2021: Heavy to very heavy rain with thundershowers at one or two places in Chennai, Tiruvallur and Kanchipuram districts. The first moderate rain is likely.

18.11.2021: Heavy to very heavy rain with thundershowers at a few places in Tiruvallur, Chennai, Ranipettai and Kanchipuram districts. Heavy to very heavy rain in a couple of places. Krishnagiri, Erode, Kallakurichi, Cuddalore and Puthuvai will receive thundershowers at one or two places.

19.11.2021: Ariyalur, Perambalur, Tiruchirappalli, Salem, Villupuram, Kallakurichi, Cuddalore, Delta districts and one or two places in Puthuvai and Karaikal will receive heavy to moderate rain and thundershowers at many places in other districts.

20.11.2021 Heavy showers with thundershowers at one or two places in Thiruvannamalai, Vellore, Ranipettai, Dharmapuri, Krishnagiri, Salem and Kallakurichi districts.

image

Showers or thundershowers will occur at a few places in Chennai during the next 24 hours. The maximum temperature is around 32 and the minimum temperature is around 25 degrees Celsius. Heavy to very heavy rain with thunder and lightning is likely in a few places in the city for the next 48 hours.

Related News: Chance of heavy rain in Chennai on the 17th and 18th - Meteorological Center

Rainfall in last 24 hours (in centimeters): Madukkur (Thanjavur), Chettikulam (Perambalur) 10 per cent, Thiruthuraipoondi (Thiruvarur), Lakkur (Cuddalore) 7 per cent, Grand Dam (Thanjavur), Manalurpet (Kallakurichi) 6 per cent, Sivagangai, Kallikudi (Madurai), Krishnagiri, Tenparanadu (Trichy), Pudukottai, Weerakanur (Salem), Thirupuvanam (Sivagangai), Chittar (Kanyakumari), Lalgudi Trichy, Thirukkattupalli (Thanjavur), Manamboondi (Villupuram), Sivalokam (Kanyakumari) Thala 5, Marungapuri (Trichy), Alangudi (Pudukottai), Viralimalai (Pudukottai), Sankarapuram (Kallakurichi), Malaiyur (Pudukottai), Pechipparai (Kanyakumari), Thiruvaiyaru (Thanjavur), Perunchani Dam (Kanyakumari) Tiruchirappalli, Vettikkadu (Thanjavur) Thala 4, Veppur ( Cuddalore), Perungalur (Pudukkottai), Dindigul (Dindigul), Karaikudi (Sivagangai), Thirumanur (Ariyalur), Thuraiyur (Trichy), Kamatchipuram (Dindigul), Pattukottai (Thanjavur), Salem, Surulakkodu (Kanyakumari), Omalur (Salem) ), Samayapuram (Trichy), Thodhudur (Cuddalore), Palaviduthi (Karur), Palani (Dindigul), Arimalam (Pudukottai), Manjalaru (Thanjavur), 3 each.


Warning for fishermen heading to the Bay of Bengal:

16.11.2021: Hurricane force winds of 40 to 50 kmph and intermittent 60 kmph are expected in the southeastern Bay of Bengal and adjacent parts of the Bay of Bengal in the Andaman Sea.

17.11.2021, 18.11.2021: Hurricane force winds of 40 to 50 kmph and intermittent 60 kmph are likely in the coastal areas of Central West, South West Bengal, South Andhra and North Tamil Nadu.

Fishermen are advised not to go to these areas.

Post a Comment

Previous Post Next Post