தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகள், வடிகால்கள் ஆகியவற்றை சீரமைக்க ரூ.300 கோடியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில், முக்கியமாக சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்ய ஏதுவாக ஹெக்டேருக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 25 கிலோ உரம், யூரியா 60 கிலோ மற்றும் டிஏபி உரம் 125 கிலோ ஆகியவை அடக்கம்.
மேலும் மழையால் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், குறுவை, கார், சொர்ணவாரி பயிர்கள் மற்றும் முழுமையாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.