முதல் சுற்றில் சிந்து தோல்வி

பர்மிங்காம்: புகழ்பெற்ற ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற 16-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி. சிந்து, 21-ம் நிலை வீராங்கனையான கொரியாவின் கா யூன் கிம்முடன் மோதினார். 61 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-19, 13-21, 13-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post