வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுலகத்தில் பயன்பாடற்ற நிலையில் குப்பைபோல் பள்ளி மாணவ மாணவிகளின் சீருடைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகள் என 126 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 12 ஆயிரம் மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான பள்ளி சீருடைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 மாதங்களாக அரசின் உத்தரவால் பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் வேதாரண்யம் வட்டாரக் கல்வி அலுவகத்தில் உள்ள மாடிப் படிகளின் ஓரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசால் வழங்கப்பட உள்ள சீருடைகள் பயன்பாடற்ற நிலையில் பண்டல் பண்டலாக குப்பைகள்போல குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மக்களின் வரிப்பணம் பாழ்படுவதை கருத்தில் கொண்டு இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெ பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News