உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையதளங்களில் பதிவு செய்வோர், உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான நோயாளிகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றோர் மருத்துவமனைக்கு மாற்றுதல், உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வருவோர் ஆதார் எண் அடிப்படையில் அத்தகைய சேவைகளை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தனிநபருக்கு ஆதார் எண் ஒதுக்கப்படும் வரை, அவருக்கு தொடர்பில்லா சேவைகள் வழங்கப்பட வேண்டும் எனவும், பொதுமக்கள், நோயாளிகளுக்கு ஆதாரின் அவசியம் பற்றி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு நாளிதழில் வெளியிட்டுள்ளது.
It has been published in the Tamil Nadu Gazette that Aadhar is mandatory for receiving and donating body parts.
The Government of Tamil Nadu has announced that those who register on the websites for organ transplant surgery, transfer patients for organ transplant surgery from one hospital to another and come forward to donate organs can avail such services on the basis of reference number.
Until an Aadhar number is allotted to an individual, he or she should be provided with non-contact services and the Tamil Nadu Organ Transplant Authority should raise awareness about the need for Aadhar for the general public and patients, the Tamil Nadu Government Daily reported.
Tags:
News