தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதால், தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வங்கக்கடலில் ஏற்கெனவே இரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, அண்மையில் கரையை கடந்தன. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் தென் தமிழகத்தை நோக்கி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 25 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
The Met Office has forecast heavy rains in Tamil Nadu from the 25th of this month due to the formation of low pressure areas in the south-western Bay of Bengal.
As the northeast monsoon intensifies, two depressions have already formed in the Bay of Bengal and recently crossed the coast. According to the Meteorological Department, a low pressure area will form in the south-western Bay of Bengal.
The low pressure area is reported to be moving west and northwest towards Sri Lanka and southern Tamil Nadu. The Meteorological Department has forecast heavy rains in Tamil Nadu from the 25th of this month.
Tags:
News