
வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு மையத்தில் புதிய தலைமுறை செய்தியாளர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவடைந்தது. 39 ஊராட்சி ஒன்றியங்களில் 14,662 உள்ளாட்சி பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு சென்ற வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், வேலூர் மாவட்டம் இராமலை வாக்குச்சாவடி அருகே செய்தி சேகரித்த புதிய தலைமுறை செய்தியாளர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
Political parties have attacked a new generation of journalists at a polling station in Vellore district.
Preliminary voting for 9 district rural local government elections across Tamil Nadu ended at 6 p.m. Voting took place for 14,662 local seats in 39 panchayat unions. Voting began at 7 a.m. and lasted until 6 p.m.
Tokens were distributed to voters who went to the polls by 6 p.m. Meanwhile, political parties attacked a new generation journalist who was covering news near the Ramalai polling station in Vellore district.
Tags:
News