தீபாவளிக்காக சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கூட்ட நெரிசலை தவிர்க்க தீபாவளி பண்டிகையையொட்டி சில சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக மதுரைக்கோட்ட தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

image

சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருவனந்தபுரம் செல்லும் ரயில்களிலும், அவற்றின் மறு மார்க்கத்திலும் இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. கோவை - ராமேஸ்வரம் சிறப்பு ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி கூடுதலாக இணைக்கப்படுகிறது. ரயில்களை போலவே தமிழகத்தில் பேருந்துகளிலும் பல்வேறு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை காலங்களில் மக்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி: ”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post