"தேமுதிகவை விட்டு செல்வது துரோகம்": விஜயகாந்த்

தேமுதிகவுக்கு எதிர்காலம் இல்லை என்று யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "100 ஆண்டுகள் ஆனாலும் தேமுதிகவை யாராலும் அழிக்க முடியாது. கழகத்தின் மீது அவதூறு பரப்புபவர்களின் வார்த்தைகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்.

image

முளைச்சலவை செய்வோரின் பேச்சு மற்றும் ஆசைவார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது துரோகம். அப்படி மாற்றுக் கட்சிக்கு செல்பவர்கள், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதை உணரும் நாள் வரும்.

image

எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான். தேமுதிக வேரூன்றவும், வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவும் தொண்டர்களின் உறுதுணை தேவை" என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post