
அதிமுகவுக்காக ஆரம்ப காலத்தில் உழைத்தவன் என்ற முறையில் அக்கட்சியின் தற்போதைய நிலை வருத்தமளிக்கிறது, சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து மக்கள்தான் முடிவு செய்வார்கள் என திருநாவுக்கரசர் எம்பி தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பெசும்போது... பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது, இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி.
ஆளுநருக்கு அறிக்கை அளிக்கும் விவகாரத்தில் தமிழக ஆளுநர் எல்லைதாண்டி செயல்படக்கூடாது அதிகார வரம்புகளை தாண்டி ஆளுநர் செயல்படுவது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல, ஜனநாயகத்திற்கு முரணானது, பாஜகவுக்கு ஒத்துழைக்காத தேசிய கட்சியோ மாநில கட்சிகள் ஆளுகின்ற மாநிலத்தில் அரசை கலைக்கவோ பழிவாங்கவோ ஆளுநரை பயன்படுத்துவது சட்டத்திற்கு புரம்பானது. ஆளுநர் எல்லை தாண்டி செல்லக்கூடாது அதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது.

நான், ஆரம்ப காலத்தில் அதிமுகவுக்காக உழைத்தவன் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஜெயலலிதா அரசியலுக்கு வரும் போது அவருக்கு உறுதுணையாக இருந்தேன். ஆனால், அதிமுகவில் தற்போது நிலவும் சூழல் வருத்தம் தரக்கூடியதாக உள்ளது, அதிமுக அப்போது பிளவுபட்டதற்கும் இப்போது பிளவுபட்டு கிடப்பதும் ஒன்றா என்று காலம்தான் முடிவு செய்ய வேண்டும்,
அரசியல் மாற்றம் உண்டாகும் என்பதை நாம் ஜோசியத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது, சசிகலா அரசியல் பயணம் குறித்து மக்கள்தான் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News