
கட்சியை வளர்ப்பதற்காக பாஜக எதிர்க் கட்சியாக செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துவரிமான் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சக்தி மாரியம்மன் கோவில் மேற்கூரை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது....
திமுக ஆட்சி வந்தபின்னர் சட்டமன்ற தொகுதிக்கான நிதி இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டவில்லை கடந்த ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு தற்பொழுது வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அமைச்சர் மூர்த்தி தொகுதியில் மட்டுமே கூடுதலாக வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.

வளர்ச்சித் திட்ட பணிகள் மேற்கொள்வதில் பாரபட்சம் பார்க்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் அதிமுக திமுக தொகுதிகள் என பாரபட்சம் பார்க்கவில்லை. கொளத்தூர் தொகுதியில் அதிகளவில் நகரும் கடைகள் கொண்டுவரப்பட்டது
மதுரை மாவட்ட வளர்ச்சிக்காக அதிமுக ஆட்சியை போல் தற்போதைய திமுக ஆட்சியிலும் கூடுதல் நிதி பெற்று புதிய பணிகள் மேற்கொள்ள மதுரையைச் சேர்ந்த இரு அமைச்சர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலைகள் உள்ளிட்ட அடிப்படை திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்றவரிடம்....
திமுகவின் ஊழலுக்கு எதிராக தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்சி போல் செயல்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்கு
கட்சியை வளர்ப்பதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியிருக்கிறார். திமுக 6 மாத காலம் எவ்வாறு ஆட்சி அமைத்து வருகிறது என்பதை பார்த்து எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜனநாயக முறைப்படி வாய்ப்பு வழங்கியுள்ளோம். அதிமுக அமைதி காக்கவில்லை. மக்களின் எதிர்பார்ப்பை திமுக ஆட்சி நிறைவேற்றவில்லை என்றால், அதிமுக வலுவான போராட்டத்தை நடத்தும் என்றார் அவர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News