
குற்றால அருவியில் குளிக்க தொடரும் தடை
தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் சூழல் சுற்றுலா பூங்காவில் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கடந்த 2019ஆம் ஆண்டு 50 லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. தற்போது குற்றாலத்திற்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல முடியாததால், இந்த பூங்காவில் குவிந்து வருகின்றனர். ரம்மியமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைத்தால், சுற்றுலா பயணிகள் வருவது மேலும் அதிகரிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:
News