புரட்டாசிக்கு பிந்தைய முதல் ஞாயிறு; இறைச்சி, மீன் அமோக விற்பனை

புரட்டாசி மாதத்திற்கு பிந்தைய முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் மீன் மற்றும் இறைச்சிக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது.
 
புரட்டாசி மாதம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சி, கறிக்கோழி மற்றும் மீன் உள்ளிட்டவற்றின் விற்பனை பெரிதும் சரிந்தது. தற்போது புரட்டாசி மாதம் முடிந்துவிட்டதால் அவற்றின் விற்பனை மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, இன்று விடுமுறை நாள் என்பதால் சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். வஞ்சிரம் கிலோ 500 ரூபாய்க்கும், வவ்வால் 550 ரூபாய்க்கும், நெத்திலி 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆட்டிறைச்சி கிலோ 800 ரூபாய்க்கும், கோழிக்கறி 240 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.
 
image
இதேபோல் கடலூர் துறைமுகப் பகுதியில் அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வியாபாரிகளும் அதிக எண்ணிக்கையில் குவிந்திருப்பதால் கடலூர் துறைமுகப் பகுதி களைகட்டியுள்ளது. கெளுத்தி, சங்கரா, கிளிச்சை, பாரை, நெத்திலி போன்ற மீன்களை வியாபாரிகளும், பொதுமக்களும் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

Post a Comment

Previous Post Next Post