
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுக்கு அடியில் படுத்துறங்கிய போதை நபர் உயிர்தப்பிய அதிசயம். வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
மேட்டுப்பாளையம் கோவை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையிலிருந்து நேற்று மாலை பாசஞ்ர் ரயில் மேட்டுப்பாளைத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது துடியலூர் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் மீண்டும் புறப்பட ஆயத்தமனது. அப்போது சிலர் திடீரென கூக்குரலிட்டனர்.

இதையடுத்து ரயிலில் இருந்து பயணிகள் இறங்கிச்சென்று தண்டவாளத்தை பார்த்தபோது, ரயிலின் 5 வது பெட்டிக்கு அடியில் மது அருந்திய ஒருவர் அளவுக்கு அதிகமான போதையில் ரயிலின் அடியில் படுத்திருந்ததை கண்டனர். இதையடுத்து அங்குவந்த ரயில்வே ஊழியர் ஒருவர் ரயிலின் அடியில் படுத்திருந்த நபரை போராடி வெளியேற்றினார்.

அப்போது ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியே வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அந்த நபரால் துடியலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News