
ஜனநாயகத்தை தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை இருப்பதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஊடகங்களை அவதூறாக விமர்சித்த நிலையில், அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். நல்லவற்றை எடுத்துரைத்து, அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் மக்களின் மனக்கண்ணாடியாக ஊடகமும், பத்திரிகைகளும் திகழ்கின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழக பாஜகவின் வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு இன்றியமையாதது எனத் தெரிவித்துள்ளார்.
அந்த அக்கறையும், ஆதரவும் தொடர்ந்து வழங்க வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மீது தமிழக பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரும் மரியாதையும், நம்பிக்கையும் கொண்டிருப்பதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News