நடிகை மனோரமாவின் மகன் பூபதி காலமானார்

சென்னை: நடிகை மனோர​மா​வின் மகனும், நடிகரு​மான பூபதி சென்​னை​யில் நேற்று கால​மா​னார். அவருக்கு வயது 60. நகைச்​சுவை, குணச்​சித்​திரம் என பல்​வேறு கதா​பாத்​திரங்​களில் சுமார் ஆயிரம் திரைப்​படங்​களுக்கு மேல் நடித்து புகழ்​பெற்​றவர் மறைந்த நடிகை மனோர​மா. இவர், எஸ்​.எம்​.​ராம​நாதன் என்​பவரை காதலித்து கடந்த 1964-ம் ஆண்டு திரு​மணம் செய்​து​கொண்​டார். பின்​னர் கருத்து வேறு​பாடு காரண​மாக அவர்​கள் பிரிந்​து​விட்​டனர்.

இவர்​களது ஒரே மகன் பூப​தி. அவரை திரை​யுல​கில் அறி​முகப்​படுத்தி பிரபல​மாக்க மனோரமா தீவிர முயற்சி எடுத்​தார். விசு​வின் ‘குடும்​பம் ஒரு கதம்​பம்’ படத்​தில் அறி​முக​மான அவர், தொடர்ந்து சில படங்​களில் நடித்​தார். தொலைக்​காட்சி தொடர்​களி​லும் நடித்​தார். ஆனாலும், பெரி​தாக சோபிக்​க​வில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post