
புதுடெல்லி: பி.ஆர்.சோப்ராவின் 1988-ம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான மகாபாரத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் பங்கஜ் தீர் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பங்கஜ் தீர், கடந்த சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சந்திரகாந்தா, பதோ பாகு, கானூன் போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா உள்ளிட்ட பல்வேறு திரைப் படங்களிலும் அவர் நடித்துள்ளார். இவரது மகன் நிகிதின் தீர், மருமகள் கிராத்திகா செங்கரும் நடிகர்கள் ஆவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Cinema