
இந்தூர்: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 4 ரன்களில் வீழ்த்தியது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.
இந்தூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் எமி ஜோன்ஸ் 58, ஹீதர் நைட் 109, கேப்டன் நேட் சீவர் பிராண்ட் 38 ரன்கள் எடுத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games