தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு திருச்சியில் வழியனுப்பு விழா

திருச்சி: 30-வது தேசிய சீனியர் மகளிர் கால்​பந்து சாம்​பியன்​ஷிப்​பின் இறு​திக்​கட்ட போட்​டிகள் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்கர் மாநிலம் நரேன்​பூரில் தொடங்​கு​கிறது. இதில் கலந்து கொள்​ளும் 10 அணி​கள் இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளதன. ‘ஏ’ பிரி​வில் ஒடி​சா, தமிழ்​நாடு, சத்​தீஸ்​கர், மேற்கு வங்​கம், கோவா அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

‘பி’ பிரி​வில் மணிப்​பூர், உத்​தரபிரதேசம், பஞ்​சாப், ஹரி​யா​னா, அசாம் அணி​கள் உள்​ளன. தமிழ்​நாடு அணி தனது முதல் ஆட்​டத்​தில் வரும் அக்​டோபர் 1-ம் தேதி சத்​தீஸ்​கருடன் மோதுகிறது. தொடர்ந்து 5-ம் தேதி மேற்கு வங்​கத்​துட​னும், 9-ம் தேதி ஒடி​சாவுட​னும் பலப்​பரீட்சை நடத்​துகிறது தமிழ்​நாடு அணி. போட்​டிகள் அனைத்​தும் ஆர்​.கே.எம் ஆஷ்ரம மைதானத்​தில் நடை​பெறுகின்​றன.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post