சென்னையில் ஜன.11-ல் டிரையத்லான் போட்டி

சென்னை: ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் போட்​டி​யின் அறி​முக விழா சென்னை தேனாம்​பேட்​டை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ‘ஐயன்​மேன் 5150 டிரை​யத்​லான் சென்​னை’ போட்டி குறித்த அறி​விப்பை வெளி​யிட்​டார்.

இந்த டிரை​யத்​லான் போட்டி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலை​யில் உள்ள எம்​ஜிஎம் பீச் ரிசார்ட்​டில் நடைபெறுகிறது. டிரை​யத்​லான் போட்​டி​யானது 1.5 கிலோ மீட்​டர் நீச்​சல், 40 கிலோ மீட்​டர் சைக்​கிளிங், 10 கிலோ மீட்​டர் ஓட்​டம் ஆகிய​வற்றை உள்​ளடக்​கிய​தாகும். இந்த போட்​டியை நடத்​து​வதற்​காக தமிழக அரசு ரூ.3 கோடியை ஒதுக்​கி​யுள்​ளது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post