லுங்கி நிகிடி பந்துவீச்சில் அசத்தல்: 2-வது ஒருநாள் போட்டியிலும் ஆஸி.யை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா

மெக்கே: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி தொடரை 2-0 என கைப்பற்றியது.

குயின்ஸ்லாந்தின் மெக்கே நகரில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மேத்யூ பிரீட்ஸ்கே 78 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 87 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 74 ரன்களும் விளாசினர்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post