தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

புலவாயோ: தென் ஆப்​பிரிக்கா - ஜிம்​பாப்வே அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி புல​வாயோ நகரில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தென் ஆப்​பிரிக்க அணி 114 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 626 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. கேப்​டன் வியான் முல்​டர் 367 ரன்​கள் குவித்து சாதனை படைத்​திருந்​தார்.

இதையடுத்து விளை​யாடிய ஜிம்​பாப்வே அணி 2-வது நாள் ஆட்​டத்​தில் 43 ஓவர்​களில் 170 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்து பாலோ-ஆன் ஆனது. அதி​கபட்​ச​மாக சீயன் வில்​லி​யம்ஸ் 83, வெஸ்லி மாதவரே 25, கேப்​டன் கிரெய்க் இர்​வின் 17 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி சார்​பில் பிரெனலன் சுப்​ராயன் 4 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கோடி யூசுப், வியான் முல்​டர் ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை கைப்​பற்​றினர்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post