
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலெங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் 3-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலெங்கா, 48-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். இதில் அரினா சபலெங்கா 7-6(7-4), 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games