ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? - லாகூர் கடாபி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அரை இறுதிக்கு முன்னேறுவதற்கு இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இரு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுடன் மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது கடைசி லீக் ஆட்த்தில் ஆஸ்திரேலிய அணி இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post