சென்னை: ஆடவருக்கான 14-வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் நேற்று மத்திய பிரதேசத்துடன் மோதியது.
இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் செல்வராஜ் கனகராஜ் (42-வது நிமிடம்), சண்முகவேல் (53-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மத்திய பிரதேச அணி சார்பில் குமார் கனோஜியா (35-வது நிமிடம்), அக்சய் துபே (42-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games