
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 272 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியதில் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்து வீச்சு முக்கிய பங்குவகித்தது. அவர், 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
Tags:
Sports-games