பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்கும் முன்னணி நடிகை..!!! - சினிமா செய்திகள். இந்த அப்டேட்டை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்துள்ளனர்..ஓ இந்த நடிகை?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மனதில் முக்கிய இடத்தை பிடித்து மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் அடித்து நொறுக்கி முன்னிலை வகிக்கிறது. இந்த நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களின் தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தி மக்களின் நாயகனாக மாறி வருகின்றனர். மேலும் சிலர் தங்களது உண்மையான முகத்தை காட்டி மக்களிடம் வெறுப்பை காட்டுகின்றனர். இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் கதிர், நடிகர் பப்லு ப்ரித்திவிராஜ், நடிகை தர்ஷா குப்தா, இந்திரஜா ரோபோ சங்கர், மகபா ஆனந்த், மவுன ராகம் சீரியல் ரவீனா, சின்னத்திரை நடிகர் விஷ்ணு, நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். இது தவிர, இன்ஸ்டாகிராமில் மிகவும் பரிச்சயமான முன்னணி சீரியல் நடிகர் நிவிஷாவும் பங்கேற்கிறார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.