கேமராவுடன் பேசுவேன்... கொக்கு போல் காத்திருப்பேன்… - விளையாட்டுத்துறை போட்டோகிராபியின் சவால் பகிரும் எல்.ராமச்சந்திரன்

சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. களத்தில் வீரர்கள் எந்த அளவுக்கு பரபரப்பாக இருந்தார்களோ அதற்கு மேல் சுழன்று கொண்டிருந்தார் சர்வதேச புகைப்பட கலைஞரான எல்.ராமச்சந்திரன். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இவர், பிளேபாய், மாக்சிம் போன்ற இதழ்களில் பணியாற்றி உள்ளார்.

புகைப்படம் தொடர்பாக 4 புத்தகங்களை எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. 2019 -ம் ஆண்டில், நான்கு மணி நேரத்தில் அதிக முகங்களை வரைந்ததற்காக அவர் தனது குழுவுடன் கின்னஸ் உலக சாதனையும் படைத்திருந்தார்.


from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

Previous Post Next Post