தருமபுரி: உறவுக்கார சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் போக்சோவில் கைது
அரூர் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (60) இவர் தனது சொந்த ஊரைச் சேர்ந்த மகள் உறவுள்ள 17 வயது சிறுமியை பெங்களூர் மாநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், அங்கு சிறுமியை பலவந்தமாக பாலியல் கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறுமியை ஓசூருக்கு அழைத்து வந்துள்ளார்.
இதையடுத்து தனது தள்ளுவண்டி கடையை பார்த்துக் கொள்ளுமாறு சிறுமியிடம் சொல்லிவிட்டு முருகன் சாப்பாடு வாங்குவதற்காகச் சென்றுள்ளார். அப்போது, தள்ளுவண்டி கடையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு முருகனுக்கு தெரியாமல் அந்த சிறுமி மதுரைக்குச் சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து மதுரைக்கு வந்த சிறுமி, தனது தாய்க்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர் மதுரைக்கு விரைந்து சென்று பேருந்து நிலைத்தில் இருந்த சிறுமியை மீட்டு, அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில், மகள் உறவுள்ள சிறுமியை, பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக முதியவர் முருகனை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.