திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகிபாபு

புத்தாண்டையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலில் திருப்படி திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

image

இந்நிலையில் நடிகர் யோகிபாபு முருகரை தரிசனம் செய்வதற்காக திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்தார். அங்கே விஐபிகள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் ஒருமணி நேரம் காத்திருந்து கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் அவரை அனுமதிக்காமல் காலம் தாழ்த்தினர். இதனால் மணமுடைந்த அவர் பக்தர்கள் இறங்கும் பாதையில் சென்று சாமி தரிசனம் செய்தார்.

image

இதையடுத்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யோகி பாபுவை கண்டவுடன் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். அவருடன் செல்பி எடுத்துக் கொண்டதோடு கை குலுக்கி வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Post a Comment

Previous Post Next Post