ஜல்லிக்கட்டில் கண்ணில் பலத்த காயமடைந்த மாடுபிடி வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியத்தில் பலத்த காயமடைந்த மாடுபிடி வீரர்  ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ராச்சாண்டார்  திருமலையில் நேற்று ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. போட்டிகளை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

image

அப்பொழுது காளைகளை அடக்கும்போது குளித்தலை  தோகமலை அருகே உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த  சிவக்குமார் என்ற மாடுபிடி வீரரை காளை முட்டியது. இதில் சிவகுமாருக்கு கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

image

பலத்த காயமடைந்த அவர், சிகிச்சைக்காக உடனடியாக அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இன்று காலை அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post