பெண் காவலர்களிடம் அத்துமீறிய புகாரில் திமுக பிரமுகர்கள் கைது - பாய்ந்தது கட்சி நடவடிக்கை!

சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் திமுக பிரமுகர்கள் இருவர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 31ஆம் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் காவலர்களிடம் அப்பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர்கள் அத்துமீறி நடந்து கொண்டதாக புகார் வெளியானது. இதைத் தொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரவீன், ஏகாம்பரம் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

image


Post a Comment

Previous Post Next Post