லத்தேரி எருது விடும் விழாவில் சிக்காமல் சீறிப்பாய்ந்த காளைகள்! 3 பேருக்கு பலத்த காயம்

லத்தேரி அருகே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருதுவிடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் நடைபெறும் பிரபலமான எருது விடும் விழா இன்று தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், முதல்கட்டமாக 43 இடங்களில் இந்த போட்டியை நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதையடுத்து இன்று லத்தேரி அடுத்த பனமடங்கி கிராமத்தில் எருது விடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

image

இதில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று சீறிப்பாய்ந்தன. குறைந்த நேரத்தில் பந்தைய தூரத்தை ஓடி கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எருது விடும் விழாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.

image

இவ்விழாவில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 33 பேருக்கு சிறு காயம் ஏற்பட்டு விழா இடத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டது.

Post a Comment

Previous Post Next Post