நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

 The trailer of actor Vadivelu's 'Nai Shekhar


நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்றப் படத்தில் கம்பேக் கொடுக்கும் வகையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்தப் படத்தின் முதல் பாடலான ‘அப்பத்தா’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை நடிகர் வடிவேலுவே பாடியிருந்தார்.

The trailer of actor Vadivelu's 'Nai Shekhar


இதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ‘பணக்காரன்’ என்ற இரண்டாவது பாடல் சமீபத்தில் வெளியாகியது. இந்தப் படம் வருகிற டிசம்பர் மாதம் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்த் ராஜ், ராவ் ரமேஷ், மனோபாலா, முனீஸ்காந்த், ஷிவானி நாரயணன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது. கலர்புல்லாக படம் எடுக்கப்பட்டிருந்தாலும், ட்ரெயிலரில் பழைய வைகைப் புயல் வடிவேலுவின் நகைச்சுவை மிஸ்ஸாவதாகவே நமக்கு தோன்றுகிறது. ஷிவானி நாரயணன் மிகவும் இளமையாகவும், கிளாமராகவும் இருக்கிறார். மற்ற துணை நடிகர்களின் காம்போ கூட செட் ஆனதாக தெரியவில்லை.

The trailer of actor Vadivelu's 'Nai Shekhar


பலரும் ட்ரெய்லர் குறித்த தங்களது ஏமாற்றத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். “சிரிப்பு வரும்னு கடைசி வரைக்கும் எதிர்பார்த்தோம், ஆனா..”.. “சிரிக்கலாமா இல்ல வேண்டாமா என்று புரியாமல் முழித்துக்கொண்டிருக்கும்..”படத்தில் காமெடி இருக்கா? இல்லையா? என தெரியாமல் குழம்பிப் போயிட்டோம்”.. “Trailer பார்த்து விட்டு சிரிப்பு வரவில்லை என புலம்பும் ரசிகர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.. ”ஒருவேளை முழு படத்தையும் பார்த்தா சிரிப்பு வருமோ??”.. “பழைய வடிவேலுவின் காமெடிக்காக காத்துகொண்டிருக்கிறோம்”.. ”சிரிப்பை தேடி இரண்டாம் முறை பார்த்தும் சிரிக்க முடியாமல் போன ரசிகர்கள்”.. “சிரிக்கலாம் என்று டைலர் பார்க்க வந்து சிரிக்காமல் போன..” எதிர் பார்ப்போடு வந்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் சார்பாக” என கமெண்டுகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். 

The trailer of actor Vadivelu's 'Nai Shekhar

உண்மையில் வடிவெலு மாடுலேஷனை அவரே ரிமேக் செய்ய முயற்சித்தது போல் தான் இருக்கிறது. ஆனந்த்ராஜ் மாடுலேஷனை கூட ரசிக்கும்படியாக இருக்கிறது. வடிவேலுவின் ஒரு ப்ரேம் கூட ரசிக்கும்படியாக இல்லை என்பதே உண்மை. ஒருவேளை படத்தை முழுமையாக பார்க்கும் போதும் மேக்கிங்கில் ஏதேனும் சுவாரஸ்யமாக இருந்தால் படம் தப்பிக்கும். இல்லையென்றால் சிக்கல்தான். வடிவலுவின் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதை மட்டும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. படம் அவரேஜ் கேட்டகரியை தாண்டினாலே நிச்சயம் வசூலை அள்ளிவிடும். 

Post a Comment

Previous Post Next Post