அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிகொண்டிருக்கிறது - இபிஎஸ்

“அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி, நம்ம ஸ்கூல் என்ற பெயரில் மீண்டும் துவங்கியுள்ளது” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த அதிமுக ஆட்சியில் 23.5.2017 அன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தி சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

image

அந்த திட்டத்தை தற்போது திமுக அரசு தங்கிலீஷில் "நம்ம ஸ்கூல்” என்று பெயர் சூட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் துவக்கி வைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

image

தொடர்ந்து, “அதிமுக அரசு துவங்கிய திட்டங்களுக்கு மூடுவிழா நடத்திய திமுக அரசு, தொழிலதிபர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்க தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளை அணுகத் தொடங்கியதன் அடிப்படையில், மீண்டும் "நம்ம ஸ்கூல்” என்ற பெயரில் துவங்கியுள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் எளிமையாக துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தை, அரசின் நிதி நிலைமை தள்ளாட்டத்தில் உள்ள சூழலில் நட்சத்திர ஒட்டலில் சுமார் 3 கோடி ரூபாய் வீணடித்து விழா நடத்தியது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post