கடும் பனிப்பொழிவு காரணமாக முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி செல்லும் வாகனங்கள்

திருவள்ளூரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்களும், வாகனங்களும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படி மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

திருவள்ளூரில் நேற்று பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்துவந்த நிலையில், இன்று கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூர், ஈக்காடு, திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயில் குப்பம், மணவாளநகர், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

image

இதையடுத்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரயில்கள் மெதுவாக செல்கின்றன. இதனால் திருவள்ளூர் - சென்னை; மார்க்கமாக செல்லும் ரயில்கள் தாமதமாக செல்கின்றன.

Post a Comment

Previous Post Next Post