சொந்த செலவில்அரசு பள்ளி கட்டடத்தை சீரமைத்த தலைமையாசிரியர்

சொந்த செலவில் பள்ளி கட்டடத்தை சீரமைத்த தலைமையாசிரியரின் செயல் பொதுமக்களை நெகிழ வைத்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டூர் ஊராட்சியில் உள்ள குருபதமேடு பகுதிpயில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

image

இந்நிலையில், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தப் பள்ளி கட்டிடம் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்து பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதனை சீரமைக்கும் நோக்கில் அந்த பள்ளியில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் வரதன் என்பவர் தனது சொந்த செலவில், 1.5 லட்சம் மதிப்பில் பழுதான கட்டடத்தை சீரமைத்து தரையில் டைல்ஸ் பதித்து சீரமைத்து உள்ளார்.

தலைமையாசிரியர் தன் சொந்த செலவில் பள்ளி கட்டடத்தை சீரமைத்திருப்பது அப்பகுதி மக்களிடையே நெழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post