பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வாய்ப்புள்ளது!

தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பேசியிருந்த நிலையில், “பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வாய்ப்புள்ளது” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக-வின் இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்.

image

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர் சந்திப்பில் தம்பிதுரை பேசுகையில், “நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதியளிக்கும் நலத்திட்டங்களை செயல்படுத்துவது குறித்து கண்காணிக்கும் குழுவின் தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளேன். இதன் மூலம் தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் அமல்படுத்தப்படுகிறதா என கண்காணிக்க முடியும். இதன் மூலம் மக்கள் பயன்பெருவார்கள். தமிழகம் வரக்கூடிய பிரதமரை வரவேற்க எடப்பாடி பழனிசாமி செல்கிறார்” என்றார். 

தொடர்ந்து பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி நாமக்கல்லில் பேசிய நிலையில், “பிரதமருடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைய வாய்ப்புள்ளது. பத்து சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும், அதிமுகவின் முடிவையும் இ.பி.எஸ் அறிவிப்பார்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post