சமூக நீதி கொள்கையை பின்பற்ற குழு அமைத்தது தமிழக அரசு

தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்ற வல்லுநர் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகளை செயல்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிர்வாக சட்ட நிபுணர்கள், மூத்த வழக்கறிஞர்கள்கொண்ட சட்ட வல்லுநர் குழுவை அமைத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
image
இந்த குழுவில் உச்ச நீதிமன்ற மாநில அரசு கூடுதல் வழக்கறிஞர் அமித் ஆனந்த் திவாரி, மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன், சட்ட விவகாரங்கள் துறையின் அரசு செயலாளர் கார்த்திகேயன், சட்ட இயற்றுதல் துறையின் செயலாளர் கோபி ரவிக்குமார், சமூக நீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் முனைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு அரசுப்பணி தேர்வாணையத்தில் வழக்கறிஞர் விஎன்வி நிறைமதி மூத்த வழக்கறிஞர் டாக்டர்.ரவிவர்மகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெயிட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post