அசந்து தூங்கும் போது காதுகளில், மூக்குகளில் கொசுக்களோ, எறும்புகளோ செல்வது சாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வாக இருந்தாலும், வாய் வழியாக நான்கு அடி கொண்ட பாம்பு சென்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மையில் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இப்படியான சம்பவம் நடந்திருக்கிறது.
ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள லெவாஷி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது வீட்டின் முற்றத்தில் அசதியில் கண் அயர்ந்திருக்கிறார். அப்போதுதான் அப்பெண்ணின் வாய் வழியாக அந்த பாம்பு சென்றிருக்கிறது.
இதனால் அசவுகரியமாக இருந்த அப்பெண் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்தான் பெண்ணின் உணவுக் குழாயில் பாம்பு இருந்தது தெரிய வந்திருக்கிறது.
Medics pull 4ft snake from woman’s mouth after it slithered down there while she slept. pic.twitter.com/oHaJShZT3R
— Fascinating Facts (@FascinateFlix) November 12, 2022
இதனையடுத்து சிறிய ட்யூப்பை கொண்டு பெண் மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணின் உணவுக் குழாயில் இருந்து பாம்பை வெளியே எடுத்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு நெட்டிசன்கள் பலரையும் அதிர வைத்திருக்கிறது.
அந்த வீடியோவில், கையுறை அணிந்திருந்த அந்த மருத்துவர், பென்ணின் வாயில் ட்யூப்பை நுழைத்து உணவுக் குழாயில் இருந்த பாம்பை மெல்ல மெல்ல வெளியே எடுக்கிறார். அப்போது அந்த பாம்பை கண்டு அதிர்ச்சியுற்ற அந்த மருத்துவர் அதனை ஒரு வாளியில் போட்டுவிட்டு கத்தியதோடு, இப்படியான ஒரு நிகழ்வு இதுகாறும் நடந்ததும் இல்லை, கேள்வியுற்றதும் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
Medics pull out 4 feet Snake from a woman's throat after the animal crawled into her mouth while she slept.
— Ngozi Clara (@ngoziclara) August 31, 2020
The incident happened in Russia.#LayconNeedsYou II #BiggieForgiveErica II Adele II #BBTolanibaj pic.twitter.com/kN5bisWrcA
இந்த சம்பவம் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்திருந்திருக்கிறது. அப்போதே அது தொடர்பான வீடியோ வைரலாகியிருந்தது. ஆனால் இந்த வீடியோ தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு உலாவிக் கொண்டிருக்கிறது.
இதனைக் கண்ட நெட்டிசன்கள், “அது எப்படி இத்தனை பெரிய பாம்பு வாய்க்குள் போகும் அளவுக்கு ஒருவரால் தூங்கிக் கொண்டிருக்க முடியும்?” என்றும், “இதனால்தான் தலை முதல் கால் வரை போர்வையால் போர்த்திக் கொண்டு தூங்க வேண்டும்” என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
This is crazy, I wonder how someone could sleep so deep and a snake gets into your mouth a 4 inch snake still you couldn't wake till it was completely in your stomach. Common that's crazy.
— CharlottecabAiden (@CharlottecabAi2) November 13, 2022
"Locals say such incidents happen infrequently and older citizens advise the young not to sleep outside because of the risk of snakes entering their mouths."https://t.co/hlrJPN3Ine
— True Americans Celebrate Democracy (@TrueCelebrate) November 12, 2022
முன்னதாக, பெண்ணின் காதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று புகுந்தது தொடர்பான வீடியோவும் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.