நாயை கொடூரமாக தூக்கிலிட்டு கொன்ற இளைஞர்!


உத்தரபிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் நாயை தூக்கில் போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக நாய்கள் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மீது சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாக நடந்து வருகிறது. அப்படி உத்திரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ட்ரோவிகா நகர் என்ற பகுதியில் வீட்டில் வளர்த்த நாயை சங்கிலியால் தூக்கில் தொங்கவிட்டு கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கண்டனங்களுக்கு ஆளாகியது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்தது.



இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நாயின் உரிமையாளர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும், நாய் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் இவ்வாறு தாங்கள் கொன்றதாக கூறி இருப்பதாகவும் இருக்கின்றனர். எனினும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் வளர்ப்பு பிராணியை கொடூரமாக கொன்றதற்காக தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.




Post a Comment

Previous Post Next Post